Rock Fort Times
Online News

ஈரோடு இடைத்தோ்தல் காங்கிரஸ் வேட்பாளா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி

 ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 65,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது இறுதிகட்ட வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்த வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,08,738 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இதுவரை நடந்த தோ்தல்களில் வெற்றி வித்தியாசத்தை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளாா். கடைசி சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளா் தென்னரசு 43,061 வாக்குகள் பெற்றுள்ளாா். அதிமுக வேட்பாளரை விட 65,000 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளா் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்