கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 152 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி திருச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினா் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினா்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை நிலைய செயலாளா் மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஏற்பாட்டில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கே.வி.டி. கலைச்செல்வன் , திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் ராமலிங்கம், கழக இதய தெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் டோல்கேட் கதிரவன் ஆகியோர் முன்னிலையில், திருச்சி நீதிமன்றம் எதிரே உள்ள வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி நிா்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், கிளை செயலாளர்கள், வட்ட நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாநில துணைச் செயலாளர் முருகானந்தம் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் . இதில் நிர்வாகிகள் இல.கண்ணன், காளீஸ்வரன், ஒண்டி முத்து, பொன். தண்டபாணி, புவனேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஓ.பி.எஸ் அணி சார்பில் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் துணை ஒருங்கிணைப்பாளர் கு.ப.கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் எண்டப்புளி ராஜ்மோகன், ரத்தினவேல், சாமிக்கண்ணு, அவைத்தலைவர் வழக்கறிஞா் ராஜ்குமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகர தே.மு.தி.க சார்பில் மாநகர செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் ஜெயராமன், மில்டன் குமார் , பிரீத்தா விஜய் ஆனந்த், என்.எஸ்.எம்.மணிகண்டன், கோட்டைலோகராஜ், காளியப்பன், சாகுல், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.