Rock Fort Times
Online News

திருச்சி: ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள்…

அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்....

 திருச்சி  மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னூர், வாமடம், ரகுமானியபுரம், தில்லைநகர், அண்ணாநகர், பிராட்டியூர், உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்ட பணி, மாநகராட்சி பொது நிதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி, தூய்மை இந்தியா திட்ட பணிகள் மற்றும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மின் மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டிகள், நியாயவிலை கடைகள் மற்றும் பொது கழிவறைகள் என மொத்தம் ரூ. 4 கோடியே 63 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சா் கே.என். நேரு இன்று ( 05.09.2023 ) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்