திருச்சி மாவட்டம் சமயபுரம் நான்கு ரோடு பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்பவர் அப்பகுதியில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று ( 05.09.2023 ) காலை 6 மணி அளவில் அவரது கடையில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ அருகில் இருந்த வெல்டிங் பட்டறைக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த கம்ப்யூட்டர், டயர்கள், ஆயில் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து தீக்கிரையானது. இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.