திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குமாரவாடியில் இருந்து இளங்காகுறிச்சி செல்லும் தார் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால், இவ்வழியே செல்ல வேண்டிய பேருந்து வையம்பட்டி வழியாக செல்வதால் பள்ளி மாணவர்கள் 5 கி. மீ. நடந்து செல்கிறார்கள். ஆகவே, இந்த சாலையை சீரமைத்து இவ்வழியாக பேருந்தை இயக்க வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.