இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் ராசையா. இவரது மகன் ஆனந்தராசா என்கிற லோகேஷ் (வயது 42 ). குற்ற வழக்கில் தொடா்புடைய இவா் , திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் துரையிடம் சென்று எனக்கு தண்டனை காலம் முடிந்து விட்டது. பிறகு ஏன் என்னை முகாம் சிறையில் வைத்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு இருந்த இரும்பு கம்பியால் போலீஸ்காரர் துரையை , லோகேஷ் தாக்கி திட்டி உள்ளார். இது குறித்து கே.கே.நகர் போலீசில் துரை புகார் அளித்தார். அதன்பேரில், கே.கே நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் இலங்கை அகதி லோகேஷ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். லோகேஷ் மீது மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலும் ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.