Rock Fort Times
Online News

அண்ணா சாலை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் பாதை தற்காலிகமாக மூடல்.

திருச்சி மாநகர் பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை சாலை ஒரு பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறுவதால் இன்று ( 01.09.2023 ) காலை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் அவ்வழியே செல்லக்கூடிய பேருந்துகள் மற்றும்  வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்