மதுரை அருகே சுற்றுலா ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர் மூர்த்தியை சம்பவ இடத்திற்கு சென்று தேவையான உதவிகளை செய்ய அறிவுறுத்தி உள்ளார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.