Rock Fort Times
Online News

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் பிரதமர் ஆவார்…!

திருநாவுக்கரசர் எம்.பி.பேச்சு...

திருச்சி பாராளுமன்ற தொகுதி ஜங்ஷன் கோட்டம் சார்பில் ஆழ்வார்தோப்பு, கண்டோன்மெண்ட் சேவாசங்கம் பள்ளி, காஜாமலை மின் நகர் சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று ( 22.08.2023 )நடந்தது. ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் தலைவர் பிரியங்கா பட்டேல் வரவேற்று பேசினார். இந்த முகாம்களில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடந்து வருகிறது. ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு சிறுபான்மை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே, வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் பாஜக அரசுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமர் ஆவார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாம்களில் மாநில பொதுச் செயலாளர்கள்  வழக்கறிஞா் சரவணன், ஜி.கே.முரளி, திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் வழக்கறிஞா் கோவிந்தராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ரெக்ஸ், மலைக்கோட்டை முரளி, பஜார் , ஆடிட்டர் சுரேஷ், பாபு,  பஷீர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்