Rock Fort Times
Online News

சென்னையில் கொசு விரட்டி எந்திரம் எரிந்து மூச்சு திணறி 4 பேர் பலி…! 

சென்னை மணலி எம்.எம்.டி.ஏ. இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் உடையார். வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய இவர், தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவருடன், அவரது மனைவி தங்கி இருந்து கவனித்து வருகிறார்.  இந்த  தம்பதியின் 3 குழந்தைகளை  கவனித்துக் கொள்ள , அவர்களது பாட்டி சந்தானலட்சுமி ஊரிலிருந்து  வந்திருந்தார். இவர்களது குடியிருப்பு பகுதியில்  கொசுத்தொல்லை அதிகமாக இருந்த தால், லிக்விட் மிஷினை பயன்படுத்தி உள்ளனர். இவர்கள் நன்றாக  தூங்கிக் கொண்டு இருந்தபோது, அந்த மிஷின் சூடாகி உருகி அருகில் இருந்த  அட்டைப்பெட்டியின் மீது விழுந்துள்ளது. அதிலிருந்து அதிகளவில் புகை வெளியேறி உள்ளது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் கொசு விரட்டும் லிக்விட் நெடி மற்றும் அந்த அட்டைப்பெட்டியின் புகையை நான்கு பேரால் உணர முடியவில்லை. இதில்  மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே நான்கு பேரும் உயிரிழந்தனர். அருகில் இருந்தவர்கள் அதிகாலை எழுந்து  பார்த்தபோது அந்த வீட்டு ஜன்னலில் இருந்து புகை வந்ததை பார்த்தனர். இதையடுத்து தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்