Rock Fort Times
Online News

லால்குடி அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை…!

போலீசார் விசாரணை...

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தண்டன்கோரை பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 26). இவருக்கும், திருச்சி உறையூர் சவேரியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த கீர்த்திகா (24) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில்,  தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரும் ஜார்ஜ்ஜை  கீர்த்திகா கண்டித்துள்ளார். ஆனாலும், அவர் தன்னை திருத்தி கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், வாழ்க்கையில் விரக்தி அடைந்த கீர்த்திகா, கடந்த 28-ம் தேதி தனது உடல் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜார்ஜ் மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் கணவன்- மனைவி இருவரையும் உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், சிகிச்சை பலனளிக்காமல் கீர்த்திகா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கீர்த்திகாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் அவர் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா ? என்று திருச்சி உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்