சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவரின் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை தனியாக அழைத்துச் சென்று தீவிர சோதனை மேற்கொண்டதில் அவர் தங்கத்தை தூளாக்கி கேப்சூல் வடிவில் உடலில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனையடுத்து அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1024 கிராம் இருந்தது. அதன் இந்திய மதிப்பு
ரூ.73.32 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பயணியிடம் தங்கத்தை கொடுத்து அனுப்பியது யார்?, யாரிடம் கொடுக்க சொன்னார்கள்?என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 956
Comments are closed.