Rock Fort Times
Online News

கூகுள் மேப்பை பார்த்தபடி பெண் ஓட்டி வந்த கார் மோதி 7 பேர் படுகாயம்…!

சென்னை அசோக் நகர் 10-வது தெருவில் வசித்து வரும் சரிதா என்பவரின் இல்ல நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் பலர் வந்திருந்தனர். இடப்பற்றாக்குறையால் உறவினர்கள் சிலர்  நேற்று இரவு வீட்டின் முன்புள்ள சாலையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணி அளவில் அந்த வழியாக மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த வைஷாலி என்ற பெண் ஓட்டி வந்த கார் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியது.  இதில் 7 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.  அவர்கள் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுகுறித்த  புகாரின்பேரில்,  சென்னை போலீசார் வைஷாலி இடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்தநிலையில் காயம் அடைந்தோர் தரப்பில் கூறுகையில், வைஷாலி கூகுள் மேப்பை பார்த்து காரை இயக்கவில்லை, மது போதையில் இருந்ததாக தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்