ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் குள்ளம்பாளையம் பகுதியில் நெல்லை மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வரும் 5 பேர் தங்கி இருப்பதாக நெல்லை மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், நெல்லையிலிருந்து வந்த தனிப்படை போலீசார் குள்ளம்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்தவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களை பிடிக்க முயன்றபோது கத்தி உள்ளிட்ட கொடூரமான ஆயுதங்களைக் கொண்டு போலீசாரை தாக்க முயன்றனர். உடனே, உதவி ஆய்வாளர் ஆண்டோ துப்பாக்கியால் அவர்களை நோக்கி சுட்ட போதும் மயிரிழையில் தப்பித்து ஓடிவிட்டனர். இதனைத்தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகள் 5 பேர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தப்பிச்சென்ற 5 பேரையும் தனிப்படை போலீசார் மற்றும் பெருந்துறை போலீசார் வலைவீசி தேடினர். இந்நிலையில், போலீசிடம் இருந்து தப்பிய சிவசுப்பு, முத்து, மணிகண்டன் உள்பட 5 பேர் நெல்லையில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.