Rock Fort Times
Online News

திருச்சி சரகத்தில் 36 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்…! 

திருச்சி காவல் சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி வரும் 36 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சிறுகனூருக்கும், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி துவாக்குடி காவல் நிலையத்துக்கும், சிறுகனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், அரியலூர் மாவட்டம் கீழப்பழுருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். முசிறி தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடுக்கும், திருவெறும்பூர் அமலாக்க பிரிவு யசோதா அரியலூர் மாவட்டம் கூவாகம் காவல் நிலையத்திற்கும், திருச்சி ரேஞ்ச் பால்ராஜ் அரியலூர் மாவட்டம் குற்றப் பதிவேடு பிரிவுக்கும், கரூர் மாவட்டம் பாலவிடுதி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்திற்கும், கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டைக்கும், கரூர் மாவட்டம் லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் சமயபுரத்திற்கும், புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு இன்ஸ்பெக்டர் தனபாலன் திருச்சி மாவட்டம் வையம்பட்டிக்கும், புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் இன்ஸ்பெக்டர் நாகவல்லி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் சுகுமார் புதுக்கோட்டை டவுன் காவல்நிலையத்திற்கு , பெரம்பலூர் மாவட்டம் குன்னம் இன்ஸ்பெக்டர் கதிரவன் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் காவல்நிலையத்திற்கும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்திற்கும், அரியலூர் மாவட்டம் திருமானுர் இன்ஸ்பெக்டர் சுமதி ரேஞ்ச் விஆர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல அரியலூர் மாவட்டம் கீழப்பழுர் இன்ஸ்பெக்டர் ராஜிவ்காந்தி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடிக்கும், கரூர் மாவட்டம் மாவட்ட குற்ற பதிவேடு ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் ரூபி கரூர் மாவட்டம் பாலவிடுதிக்கும், திருச்சி மாவட்டம் துவக்குடி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தா. பேட்டை காவல் நிலையத்திற்கும், அரியலூர் மாவட்டம் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கும், கரூர் மாவட்டம் குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார் அரியலூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கும், திருச்சி ரேஞ்ச் ஷியாமளாதேவி அரியலூர் மாவட்டம் டி.பழூர் காவல்நிலையத்திற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், திருச்சி ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் சட்டநாதன் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூருக்கும், கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் இன்ஸ்பெக்டர் அழகு ராமு திருச்சி ராம்ஜி நகருக்கும், திருச்சி மாவட்டம் புஸ்பகனி கரூர் மாவட்டம் லாலா பேட்டைக்கும், திருச்சி போலீஸ் பயிற்சி நிலைய ஷண்முகப்ரியா பெரம்பலூர் மாவட்டம் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், திருச்சி நகர தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உமா சங்கரி புதுக்கோட்டை மாவட்ட குற்றப் பதிவுத் துறைக்கும், திருச்சி போலீஸ் பயிற்சி நிலைய அழகர் லால்குடி காவல்நிலையத்திற்கும், விருதுநகர் மாவட்டம் விஜயகுமார் கரூர் மாவட்டம் குளித்தலைக்கும், திண்டுக்கல் மாவட்டம் ஜெயபாண்டி குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், சேலம் நகர எஸ்.பி.சி.ஐ.டி பிரகாஷ் அரியலூர் மாவட்டம் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், சிவகங்கை மாவட்டம் இளையராஜா புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலுக்கும், சேலம் நகர செல்வி கரூர் மாவட்ட குற்றப் பதிவேடு பிரிவுக்கும், திருச்சி என்ஐபி சி.ஐ.டி விஜயகுமாரி புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு மேனகா கரூர் ரூரல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், திருச்சி புலனாய்வு பிரிவு ராமர் புதுக்கோட்டை அமலாக்கப் பிரிவுக்கும், சென்னை பெருநகர காவல் தங்கராஜு கரூர் மாவட்டம் க.பரமத்தி சர்க்கிள் -க்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் பிறப்பித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்