திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி ஐபிஎஸ் அறிவுரையின்படி, திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் எடுத்து வருகிறார்கள். அதன்படி, இன்று(01.02.2024) கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை ஸ்டேசன் ரோடு பகுதியில் உள்ள தனியார் லேத் பட்டறையில் சட்டத்திற்கு விரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பழைய துப்பாக்கி ஒன்றும், அதற்கு பயன்படுத்த கூடிய ஈய தோட்டாக்கள், வீச்சு அரிவாள்-1, பெரிய பட்டா கத்தி-1 போன்ற பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் குமரன் நகரை சேர்ந்த அப்துல் ஹமீது (வயது 34) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்துல் ஹமீது கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு நபருடனும், திருச்சி கே.கே.நகரை சேர்ந்த ஜியாவுதீன் (38) என்பவருடனும் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அப்துல் ஹமீது மற்றும் ஜியாவுதீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். பயங்கர ஆயுதங்களுடன் இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.