புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர், மாத்தூர் சிதம்பரம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் நாகேந்திரன் (வயது 24). இவர் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக திருச்சி புத்தூரில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு மருத்துவமனையின் உள்புறம் பிசியோதெரபி பிரிவு அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மருத்துவமனைக்கு சென்று விட்டு வாகனத்தை எடுக்க வந்தபோது தனது மோட்டார் சைக்கிள் காணாதது கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் நாகேந்திரன் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளை திருடியதாக ஸ்ரீரங்கம் சிங்கர் கோவில் தெருவை சேர்ந்த மணி மகன் முருகானந்தம் (23),சமயபுரம் டோல்கேட் தாளக்குடி பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பார்த்திபன் (25) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Comments are closed.