ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ஜான்சி நகரை சேர்ந்தவர் பிரபு (36 வயது) . இவர் 3 டிஜிட் நம்பர் லாட்டரி வாங்கியுள்ளார். அதற்கு ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்து உள்ளது. அந்த பரிசுத்தொகைக்கு லாட்டரி வியாபாரிகள் 400 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர். மேலும் இரண்டு நாட்கள் கழித்து ஒரு லாட்டரி சீட்டை வாங்கினார். அந்த லாட்டரி சீட்டுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு தொகை விழுந்து உள்ளது. அதே லாட்டரி வியாபாரியிடம் போய் மீண்டும் பரிசு தொகையை கேட்டுள்ளார் .ஆனால் பரிசுத்தொகையை கொடுக்காமல் அவர்கள் ஏமாற்றியுள்ளனர். உடனே இது குறித்து பிரபு ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த இரண்டு வியாபாரிகள் சேகர்,ரமேஷ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 லட்சத்து ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் செல்போன், இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். லாட்டரி சீட்டுகள் விற்பதற்கு தமிழ்நாட்டில் தடை உள்ளது .இருந்தாலும் குறிப்பாக திருச்சியில் சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி சீட்டுகள் விற்பனை நாளுக்கு நாள் கொடி கட்டி பறக்கிறது .போலீஸ் இதை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.