Rock Fort Times
Online News

திருச்சி சமயபுரம் அருகே கார் லாரி மோதல் 2 பேர் பலி !

கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (64). இவரது மனைவி பொற்கொடி (55) அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர்கள் கணேசன் மனைவி தனலெட்சுமி (52) லோகேஸ்வரன் மனைவி மோனிகா (32), லோகேஸ்வரன் மகள் கிரிஷா (6), மகன் ராய்கிருஷ் (2), சண்முகம் மனைவி மனோன்மணி (83) ஆகியோர் திருச்சி சமயபுரம் அருகே பழூரில் உள்ள அவர்களது உறவினரின் பிறந்தநாள் விழாவிற்காக கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு ஒரு வாடகை காரில் சென்றனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழூர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது முன்னாள் சென்ற குடிநீர் லாரியின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வெங்கடாசலம் மற்றும் அவரது உறவினர் தனலெட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். குழந்தைகள் உட்பட காரில் பயணம் செய்த மற்ற ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் டோல்கேட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் டோல்கேட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்