திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவரும், மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவரும் பொன்மலை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் தங்கி எஸ்.எஸ்.எல்.சி படித்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் பள்ளி விடுதியில் இருந்து திடீரென நேற்று இரவு மாயமாகி விட்டனர். விடுதி வார்டன் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியை ஜுலி பொன்மலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து மாணவிகள் எங்கு சென்றனர் ?, என்ன ஆனார்கள்?என்று விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.