திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் சிறப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு சூதாடி கொண்டிருந்த 9 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ.25 ஆயிரம் பறிமுதல் செய்தனர். இதேபோல, அந்த மண்டபத்தின் இன்னொரு பகுதியில் சூதாடிக்கொண்டிருந்த மேலும் 10 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த கும்பலிடம் இருந்து ரூ.25 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.