Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கத்தில் 17 வயது சிறுமி கடத்தப்பட்டாரா? போலீசார் விசாரணை…

ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றார் .பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். அதில், தனது மகளை மூலத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் கடத்திச் சென்று இருக்கலாம் என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை அவர் கடத்திச் சென்றாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல, ஸ்ரீரங்கம் கண்டித் தெரு பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் (வயது 50) என்பவர் மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி லட்சுமி ஸ்ரீரங்கம் போலீசில் அளித்த புகாரின் பேரில் அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்