Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் 16 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடல்..  

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி இருந்தனர். இதனை ஏற்ற தமிழக அரசு முதல் கட்டமாக இன்று ( 22.06.2023 ) முதல் தமிழ்நாடு முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இதில், திருச்சி மண்டலத்தில் 100 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. அதன்படி திருச்சி மாநகரில் 13 கடைகள், புறநகர் பகுதியில் 3 என மொத்தம் 16 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன.
மூடப்படவுள்ள கடைகள் மற்றும் அதற்கான எண்கள் விவரம் வருமாறு:- திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலை தென்றல் நகர் பகுதி கடை (10202), பாபு ரோடு (10219), பெரிய கடைவீதி (10249), கரூர் புறவழிச்சாலை பைபாஸ் ரோடு அண்ணாமலை நகர் (10253), கல்கண்டார்கோட்டை தங்கேஸ்வரி நகர் வடக்கு (10271), எடமலைப்பட்டிபுதுார் (10314), வரகனேரி பிச்சை நகர் (10513), மத்திய பேருந்து நிலையம் அருகில் மெக்டொனல்ஸ் சாலை (10522), தேவதானம் (10559), உறையூர் கோணக்கரை ரோடு (10536), திண்டுக்கல் பிரதான சாலை கருமண்டபம் (10302), காந்தி மார்க்கெட் (10209) பகுதி கடைகள் மூடப்படுகின்றன. இதேபோல புறநகர் பகுதிகளான திருவெறும்பூர் நவல்பட்டு சாலை (10376), மணப்பாறை செவலுார் (10325), கல்லக்குடி (10337), பூவாளூர் கிழக்கு (10510) பகுதியில் உள்ள கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன என டாஸ்மாக் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்