Rock Fort Times
Online News

திருச்சி தனியார் மருத்துவமனையில் ரூ.14 லட்சம் கையாடல்…

பெண் மீது வழக்கு...

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இதில், திருச்சி ஆர்.எம்.எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்த வடிவேல் மனைவி தமிழ்ச்செல்வி ( வயது 36 )என்பவர் கணக்காளராக கடந்த 2016 முதல் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண்குமார் வரவு-செலவு கணக்குகளை சரிபார்த்தபோது கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை வரை 7 மாத காலத்தில் ரூ.14 லட்சத்து 28 ஆயிரத்து 96 கையாடல் நடந்து இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசில் டாக்டர் அருண்குமார் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பேபிஉமா, தமிழ்ச்செல்வி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்