தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
*கே.ஜோஷி நிர்மல் குமார், சேலம் மாநகர காவல் ஆணையராக இருந்த இவர், சென்னை டிஜிபி அலுவலகத்தில் நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
*ஏ.ஜி.பாபு, சென்னை பெருநகர காவல் தலைமையக கூடுதல் ஆணையராக இருந்த இவர், தற்போது சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
*டாக்டர் சந்தோஷ் ஹதிமானி,சேலம் சரக டிஐஜியாக இருந்த இவர், சென்னை பெருநகர காவல் நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் ஆணையராக பொறுப்பேற்கிறார்.
*என்.தேவராணி, லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜியாக இருந்த இவர், தற்போது சேலம் சரக புதிய டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
*வி.பத்ரி நாராயணன், கோயம்புத்தூர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக இருந்த இவர், சென்னை அடையாறு பகுதி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
*ஏ.சி.கார்த்திகேயன்: காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
*என்.மதிவாணன்: சென்னை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு எஸ்பியாக இருந்த இவர், சென்னை பரங்கிமலை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
*வி.ஆர்.சீனிவாசன், சென்னை பரங்கிமலை துணை ஆணையராக இருந்த இவர், சென்னை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
*கே.ஸ்டாலின்: சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய எஸ்பியாக இருந்த இவர், சென்னை சிபிசிஐடி தெற்கு மண்டல எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
*பி.சுந்தரவடிவேல், சென்னை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக இருந்த இவர், சென்னை நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
*டாக்டர் வி.பாஸ்கரன், சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக இருந்த இவர், சேலம் வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
*அங்கித் சிங், சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த இவர், தற்போது சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
*டாக்டர் ஆர்.ஸ்டாலின், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு வடக்கு மண்டல எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்ற உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.