Rock Fort Times
Online News

திருச்சியில் கஞ்சா,லாட்டரி விற்ற 12 பேர் கைது..

திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சின்ன கொத்தமங்கலம் பகுதியில் கஞ்சா விற்றதாக ஆறுமுகம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் கோட்டை, தில்லை நகர் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்றதாக ஜெயக்குமார், அன்வர் பாஷா ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் திருச்சி கண்டோன்மெண்ட், கே.கே.நகர், தில்லை நகர் ஆகிய பகுதிகளில் சூதாட்டம் நடைபெற்ற இடங்களில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர். இந்த அதிரடி வேட்டையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கேட்பாரற்று கிடந்த ஐந்து இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்