Rock Fort Times
Online News

கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் ராபர்ட் பிரிவோஸ்ட் – * அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட உலக தலைவர்கள் வாழ்த்து! (வீடியோ இணைப்பு)

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் 26ம் தேதி ரோம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது. அதன்பின்னர், புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வந்தன. சிஸ்டைன் ஆலயத்தில் 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினல்கள் கூடி தங்களுக்குள் ஒருவரை அடுத்த போப் ஆண்டவராக தேர்வு செய்துள்ளனர். அதன்படி, அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த 69 வயதான ராபர்ட் பிரிவோஸ்ட் புதிய போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் போப் 14ம் லியோ (leo XIV) என்ற பெயருடன் தன்னை அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். புதிய போப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் 14ம் லியோ, மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ்க்கு பின் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த இரண்டாம் திருத்தந்தை ஆவார். புதிய போப் ராபர்ட் பிரிவோஸ்ட்-க்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்