திருச்சி மாவட்டம் லால்குடி இடையாற்று மங்களத்தை சேர்ந்த அமலா சாந்தினி வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக பெட்டவாய்த்தலையை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவரிடம் 1. 90 லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாந்துள்ளார் .இதே போல் சமூக ஆர்வலர் பெட்டிசன் காமராஜ் என்பவரிடம் 5. 75 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவர் மீதும் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமலா சாந்தி தீக்குளிக்க முயற்சித்தார் . மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.