Rock Fort Times
Online News

கணவனை கொலை செய்த மனைவி உட்பட 3 பேர் கைது

திருச்சி ராம்ஜிநகர் போலீசார் விஜயகுமார், ராஜா இருவரும் நேற்று மாலை நவலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். நவலூர் அரியாற்று பாலத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மாருதி வேனை போலீசார் சோதனை செய்ய சென்ற போது வேன் அங்கிருந்து வேகமாக புறப்பட்டது. சந்தேகமடைந்த விஜயகுமார் தனது பைக்கில் சினிமா பாணியில் வேனை பிடிக்க பின் தொடர்ந்தார். நவலூர் வாட்டர் டேங்க் அருகே சென்ற வேனில் இருந்து கை, கால்கள் கட்டப்பட்டு சாக்கில் சுற்றிய நிலையில் ஒரு ஆண் சடலம் கீழே விழுந்தது. உடனே வேன் நிற்காமல் அங்கிருந்து சென்றது. விடாமல் போலீசார் விரட்டி சென்று வேனை மடக்கினர். பொதுமக்களும் ஒன்று சேர்ந்து வேனில் இருந்தவர்களை கையும் களவுமாக பிடித்தனர். தகவலறிந்த ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் வீரமணி, உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கை, கால் கட்டப்பட்டு சாக்கு மூட்டையில் சுற்றப்பட்டு இருந்தவர் வாசன் வேலி 16வது குறுக்கு தெருவை சேர்ந்த வெங்காய வியாபாரி சிவலிங்கம் (40) என்பதும், 
சிவலிங்கம் குடித்துவிட்டு தொடர்ந்து மனைவி  தனலட்சுமியை (36) துன்புறுத்தி வந்ததால்  மனைவி மற்றும் அவரது உறவினர்களான செந்தில்குமார் (40), கருமண்டபம் ஜே.பி.நகரைச் சேர்ந்த ஆறுமுகம் (55), ஆறுமுகத்தின் மனைவி சுமதி (42) ஆகியோர் சேர்ந்து சிவலிங்கம் இல்லத்தில் படுகொலை செய்து,  சிவலிங்கத்தின் உடலை  சாக்குமூட்டையில் கட்டி வேனில் ஏற்றிச் சென்று காட்டுப் பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி செய்திருப்பதும் தெரிய வந்தது. போலீசார் சிவலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து தனலட்சுமி, ஆறுமுகம், சுமதியை கைது செய்து விசாரித்து வருகிறார். தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி ராம்ஜிநகர் போலீசார் விஜயகுமார், ராஜா இருவரும் நேற்று மாலை நவலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். நவலூர் அரியாற்று பாலத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மாருதி வேனை போலீசார் சோதனை செய்ய சென்ற போது வேன் அங்கிருந்து வேகமாக புறப்பட்டது. சந்தேகமடைந்த விஜயகுமார் தனது பைக்கில் சினிமா பாணியில் வேனை பிடிக்க பின் தொடர்ந்தார். நவலூர் வாட்டர் டேங்க் அருகே சென்ற வேனில் இருந்து கை, கால்கள் கட்டப்பட்டு சாக்கில் சுற்றிய நிலையில் ஒரு ஆண் சடலம் கீழே விழுந்தது. உடனே வேன் நிற்காமல் அங்கிருந்து சென்றது. விடாமல் போலீசார் விரட்டி சென்று வேனை மடக்கினர். பொதுமக்களும் ஒன்று சேர்ந்து வேனில் இருந்தவர்களை கையும் களவுமாக பிடித்தனர். தகவலறிந்த ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் வீரமணி, உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கை, கால் கட்டப்பட்டு சாக்கு மூட்டையில் சுற்றப்பட்டு இருந்தவர் வாசன் வேலி 16வது குறுக்கு தெருவை சேர்ந்த வெங்காய வியாபாரி சிவலிங்கம் (40) என்பதும், 
சிவலிங்கம் குடித்துவிட்டு தொடர்ந்து மனைவி  தனலட்சுமியை (36) துன்புறுத்தி வந்ததால்  மனைவி மற்றும் அவரது உறவினர்களான செந்தில்குமார் (40), கருமண்டபம் ஜே.பி.நகரைச் சேர்ந்த ஆறுமுகம் (55), ஆறுமுகத்தின் மனைவி சுமதி (42) ஆகியோர் சேர்ந்து சிவலிங்கம் இல்லத்தில் படுகொலை செய்து,  சிவலிங்கத்தின் உடலை  சாக்குமூட்டையில் கட்டி வேனில் ஏற்றிச் சென்று காட்டுப் பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி செய்திருப்பதும் தெரிய வந்தது. போலீசார் சிவலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து தனலட்சுமி, ஆறுமுகம், சுமதியை கைது செய்து விசாரித்து வருகிறார். தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்