திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலராக பணி யாற்றி வந்தவர் வேல்முருகன். இவர் திடீரென பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு மாநில சீனியர் தடகளப்போட்டிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தன. அப்போது மைதான வளாகத்துக்குள் தனிப்பட்ட அகாடமிகள் சார்பில் அரசியல் கட்சி பிரமுகரின் படத்துடன் கூடிய விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தது. அரசுக்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதியின்றி பதாகைகள் வைக்க அனுமதித்தது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், விளையாட்டு அலுவலர் வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் குழு விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலராக (பொறுப்பு) கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே விளையாட்டு விடுதி வார்டனாக பணி புரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.