நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் இன்று(11-07-2024) காலை கைது செய்யப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாக பாடியதாக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சாட்டை துரைமுருகன் கைது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது எல்லாம் பாயாத வழக்கு மேடையில் பேசியதற்காக பாய்கிறது. எதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்தீர்கள்?, என்னை விட அதிகமாக சாட்டை துரைமுருகன் பேசிவிட்டாரா?. என்னை சுற்றியிருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள். “முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பற்றி தவறாக பாடியதால், சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளார்கள். அந்த பாட்டை பாடுவதில் என்ன அவதூறு இருக்கிறது. எழுதியவர், பாடியவரை விட்டுவிட்டு மறுபடியும் எடுத்து பாடியவரை கைது செய்கிறீர்கள்.” “நான் பாடுகிறேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள். திமுகவினர் பேசினால் கருத்துரிமை, எதிர்க்கட்சிகள் பேசினால் அவமதிப்பா?” என்று ஆவேசமாக கூறினார் .
Comments are closed.