Rock Fort Times
Online News

2026 சட்டமன்றத் தேர்தலில் யார் முதல்வர்?- பிரபல கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்து கணிப்பு முடிவு!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் ஆட்சியை தக்க வைக்க திமுகவும், இழந்த ஆட்சியை பிடிக்க அதிமுகவும், புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய், முதல்முறையாக ஆட்சியைப் பிடிக்கவும் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கருத்துக் கணிப்பில், மீண்டும் திமுகவே ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளருக்கான கருத்துக் கணிப்பில் மு.க.ஸ்டாலின் முதல் இடத்தையும், எடப்பாடி பழனிசாமியை பின்னுக்குத் தள்ளி விஜய் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 3-ம் இடமும், சீமானுக்கு 4-ம் இடமும், அண்ணாமலைக்கு 5-ம் இடமும் கிடைத்துள்ளது. தவெகவால் யாருக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்துக் கணிப்பின் முடிவில், திமுகவுக்கே அதிகம் பாதிப்பு ஏற்படும் என முடிவுகள் வெளியாகியுள்ளது. அடுத்ததாக விசிக, அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், தவெகவால் நாம் தமிழர் கட்சிக்கு சொற்ப அளவே பாதிப்பு ஏற்படும் என முடிவுகள் வெளியாகியுள்ளது. புதிய வாக்காளர்களை கவரும் இளம் தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பில் விஜய்க்கு முதல் இடமும், அண்ணாமலைக்கு 2-ம் இடமும், உதயநிதிக்கு 3-ம் இடமும், சீமானுக்கு 4-ம் இடமும் கிடைத்துள்ளது. இந்தக் கருத்துக்கணிப்புக்காக நகரங்களில் 54.8% பேரிடமும், கிராமங்களில் 41.3 சதவீதம் பேரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த கருத்துக் கணிப்பு 234 தொகுதிகளிலும் 81,375 பேரிடம் எடுக்கப்பட்டதன் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் 21 முதல் 30 வயதினர் 25.6 சதவிகிதம் பேரிடமும், 46 முதல் 60 வயதினர் 23.5 சதவிகிதம் பேரிடமும் கருத்துக் கேட்கப்பட்டது. அதில், 41.3 சதவிகிதம் பேர் 31 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கருத்துக் கணிப்பில் 81.71 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்றும், 10.55 சதவிகிதம் பேர் கிறிஸ்தவர்கள் என்றும், 7.75 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்