தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதோடு, சுமார் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டனர். இது இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. அமலாக்கத்துறை முன்வைத்த அறிக்கையை தனது அரசியல் அஸ்திவாரமாக தற்போது எடுத்துள்ளது. அதன்படி, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஆயிரம் கோடி அமுக்கிய அந்த தியாகி யார் ? என கேள்வி கேட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், டாஸ்மாக் ஊழல் – பாட்டிலுக்கு பத்து ரூபாய், விற்பனையில் ஆயிரம் கோடி, உரிமம் வராத பார்கள் மூலம் ரூ.40,000 கோடி ஊழலா ?என மக்கள் கேள்வி என்றும், ஆயிரம் ரூபாய் கொடுப்பது போல கொடுத்து ஆயிரம் கோடி அமுக்கிய அந்த தியாகி யார் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. திமுகவை விமர்சித்தி திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் அதிமுக சார்பில் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள், அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.
Comments are closed.