திருச்சியில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு ரூ.13.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்:* அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் வழங்கினர் !
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 5,377 பயனாளிகளுக்கு ரூ.13.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர். இவ்விழாவில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் மதுபாலன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், பழனியாண்டி, கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, திட்ட இயக்குநர் (மகளிர்திட்டம்) சுரேஷ் மற்றும் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.