வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பை காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம் இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் சில விரைவு ரயில்கள் நின்று செல்ல தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. நாளை மறுதினம் 23/12/ 2023 அதி காலை 4 மணியளவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வையொட்டி,
டிசம்.22 முதல் 23 வரை வண்டி எண் 12633சென்னை எக்மோர் கன்னியாகுமரி Express, அதே போன்று I6102 கொல்லம் சென்னை எக்மோர் விரைவு ரயில்கள்
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் 1 நிமிட நேரம் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
1
of 842
Comments are closed, but trackbacks and pingbacks are open.