திருச்சி கிழக்கு மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மேலபுதூரில் அவைத்தலைவர் ஜேக்கப் தலைமையில் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் வரவேற்று பேசினார். விழாவில், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் திருச்சி கத்தோலிக்க மறை மாவட்ட முதன்மை குரு அந்துவான், பணி குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அம்புரோஸ்,
கும்பகோணம் இறைப்பணி திருக்கூடம் ஜோதிமலை திருவடிக்குடில் சுவாமிகள், தென்னூர் ஆழ்வார் தோப்பு பள்ளிவாசல் இமாம் நூர் முகமதுஉள்பட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். விழாவில், திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் நிக்சன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜான் பிரகாஷ் எபினேஷன், மண்டலச் செயலாளர் அடைக்கலராஜா மற்றும் மாவட்ட, தொகுதி, பகுதி, வார்டு, மகளிரணி, நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செய்தி தொடர்பாளர் தன்ராஜ் நன்றி கூறினார்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 940
Comments are closed, but trackbacks and pingbacks are open.