திருச்சி புங்கனூர் பொன்னி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 41). இவர் தீரன் நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் டைலர் கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த குணா என்பவரது சகோதரி அவரிடம் ஆடைகள் தைக்க கொடுத்துள்ளார். அதன் பின்னர் சரவணன் குணாவின் மனைவி செல்போனுக்கு தொடர்பு கொண்டு அவரிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரம் அடைந்த குணா மற்றும் சிலர் டைலர் கடைக்குள் புகுந்து சரவணன் அடித்து உதைத்தனர். இதில் அவரது முகம் கை கால்களில் காயம் ஏற்பட்டது அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் டைலர் கடை பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இதுகுறித்து குணா உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.