கும்பகோணம் அருகே கீழ்மாந்தூரில் மனைவி கள்ளக்காதலனுடன் கணவரை தலையில் அடித்து கைற்றால் நெறித்து கொலை செய்த வழக்கில் இருவர் கைது
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அருகே கீழ்மாந்தூர் பழைய தெருவை சேர்ந்தவர் பாரதி (வயது 35) இவரது மனைவி திவ்யா (வயது 27). அதே பகுதி J.R.J நகரைச் சேர்ந்த டேவிட் என்கிற சதீஷ்குமார் (வயது 38) திவ்யாவின் காதலன் கடந்த சில தினங்களாக பாரதியை காணவில்லை என்று அவரது உறவினர் செல்வமணி என்பவர் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து பந்தநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திவ்யா அவரது காதலன் டேவிட் என்கிற சதீஷ்குமார் சேர்ந்து பாரதியின் தலையில் அடித்து கயிற்றால் நெறித்து கொலை செய்து உள்ளனர். பின்னர் கொலை செய்யப்பட்ட பாரதியின் உடலை மினி லோடு வேன் மூலம் திருப்பனந்தாள் அருகே பட்டம் குறுக்கு ரோடு மேலே உள்ள பாலத்தின் அருகே புதைத்து விட்டனர். திவ்யாவையும் கள்ளக்காதலன் சதீஷ்குமாரும், இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில் பந்தநல்லூர் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பந்தநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.