Rock Fort Times
Online News

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் தேரோட்டம் இருமுறை தடைபட்டதால் பரபரப்பு…!

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று(08-04-2024) நடைபெற்றது. ஜம்புகேஸ்வரரும், அம்பாளும் எழுந்தருளிய தேர் முதலில் இழுக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் தேரானது நிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட சமுதாயத்தை குறிக்கும் டி ஷர்ட் அணிந்தவாறு தேருக்கு கட்டை போடுபவர்கள் உள்ளதால் தேரை இயக்க வேண்டாம் என அறநிலையத்துறையினரிடம் போலீசார் கூறியதால் தேர் நிறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கோவில் அதிகாரிகள் மற்றும் போலீசார், ஒரு சமுதாயத்தை குறிக்கும் வகையில் டி-ஷர்ட் அணிந்திருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த டி-ஷர்டை மாற்றுமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின்னர் டி-ஷர்ட்டை அவர்கள் கழற்றிய பிறகு சுமார் 45 நிமிட தாமதத்திற்கு பிறகு தேர் அங்கிருந்து புறப்பட்டது. பின்னர் தெற்கு வாசல் வழியாக வரும்போது தேரின் மேற்பகுதியில் கயிறு அவிழ்ந்ததால் மீண்டும் தேர் நிறுத்தப்பட்டது. அதனை சரி செய்த பிறகு சுமார் ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு தேர் அங்கிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. தேரோட்டம் இருமுறை தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்