Rock Fort Times
Online News

திருச்சி பி.எம்.ஆர். பிளாட்ஸின் புதிய மனைப்பிரிவு துவக்க விழா…!

திருச்சி பி.எம்.ஆர் பிளாட்ஸ் பிரைவேட் லிமிடெட்-ன் புதிய வீட்டுமனை பிரிவு துவக்க விழா சூரியூரில் நடைபெற்றது. தொழிலதிபர் இன்ஜினியர்.ஆர்.ஆர்.எஸ் முருகன், பி.எம்.ஆர்.பிளாட்ஸ் நிர்வாக இயக்குனர்கள் பி.பாலகிருஷ்ணன், பி.மகேஷ், பி.ராஜேஷ், பி.தினேஷ், ஆகியோர் ரிப்பன் வெட்டி புதிய மனைப்பிரிவை திறந்து வைத்தனர்.  இதன் சிறப்பம்சங்கள் குறித்து இன்ஜினியர் பி.எம்.ஆர். மகேஷ் கூறும்போது.,  திருச்சியில் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக துவாக்குடி – பஞ்சப்பூர் இருந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. அதன் பிறகு இப்பகுதியில் “லேண்ட் வேல்யூ” பல மடங்கு அதிகரித்து விடும். இதை மனதில் வைத்தே அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் ‘சுகந்த் நகர்’ எனும் மனைப்பிரிவை அறிமுகம் செய்துள்ளோம்.  மனைப்பிரிவை சுற்றிலும் காம்பவுண்ட், சிசிடிவி கேமரா, சிமெண்ட் ரோடு, டிடிசிபி & ரெரா அப்ரூவ்ட், 24 மணிநேர போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இங்கு உள்ளது. மனைப்பிரிவிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் திருச்சியின் புதிய மத்திய சிறைச்சாலை, ஒலிம்பிக் அகாடமி ஆகியவை அமைய இருக்கின்றன. திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களை இணைக்கும் மிக முக்கிய பகுதியாக இது இருக்கிறது. எனவே மக்கள் தாராளமாக இங்கு முதலீடு செய்யலாம் என்றார்.  இவ்விழாவில், திறுவெறும்பூர் ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் சூரியூர் சக்தி, சூரியூர் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.சண்முக சுந்தரம், அண்ணாமலையார் பில்டர்ஸ் திலக்ராஜ், தொழிலதிபர் பெரியசாமி, ஏபிஎஸ் கன்ஸ்ட்ரக்ஷன் பொன்னியின் செல்வன், எம்.எஸ்.எம். சுந்தர், அதிரத் பிராப்பர்டீஸ் மோகனாஸ்ரீ தமிழ்க்குமார் உள்ளிட்ட பல்வேறு தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பி.எம்.ஆர். பிளாட்ஸின் டாக்குமெண்ட் மேனேஜர் பிலிப்ஸ், பைனான்ஸ் மேனேஜர் மணிகண்ட பிரபு ,கார்டன் மேனேஜர் தனசேகர், பாஸ்கர், வீரக்குமார், ராஜராஜன், உதயக்குமார், விவேக் ,சத்தியசீலன்,ரித்திக் உள்ளிட்டவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தவெக செயற்குழு கூட்டத்திற்கு மாஸ் என்ட்ரி தந்த விஜய்...! யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..!

1 of 899

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்