திமுக அரசை கண்டித்து திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க வினர் 58 பேர் மீது வழக்கு…!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்பதால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற மாவட்ட தலைவர் ராஜசேகரன், மாவட்ட பார்வையாளர் லோகிதாஸ், மாவட்ட செயலாளர் நாகேந்திரன், மாவட்ட இளைஞரணி புருஷோத்தமன், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜன், பொருளாளர் செல்வத்துரை, மண்டல் தலைவர்கள் ராஜேஷ், மல்லி செல்வம், வெங்கடேஷ், சதீஷ், செந்தில் உள்ளிட்ட 58 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் மீது 3 பிரிவுகளின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Comments are closed.