நடத்தையில் சந்தேகம் ; மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கொடூர கணவன்! துறையூர் அருகே பரபரப்பு
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கோணக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (55). இவரது மனைவி செங்கொடி(43). இவர்களுக்கு திருமணம் ஆகி 24 வருடங்கள் ஆகிறது. கணவன் சிவக்குமார் காச நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தினம்தோறும் குடிபோதையில் இருந்துள்ளார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. தொடர்ந்து, செங்கொடி படுத்திருக்கும் பொழுது சிவக்குமார் வீட்டிலிருந்த அம்மிக்கல் குழவியை எடுத்து தலையில் போட்டு கொலை செய்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே செங்கொடி தலை நசுங்கி இரத்த வெள்ளத்தில் பலியானார். இது பற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர். மேலும் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.