திருச்சி எம்.பி துரை வைகோ மகள் திருமணம் – பகுத்தறிவு பல் இளிக்கிறது ! கழுவி, கழுவி ஊற்றும் நெட்டிசன்களால் பரபரப்பு !
தனது வாழ்நாள் முழுவதும் தன்னை திராவிட பேரியக்கத்தின் புரட்சியாளர் என காட்டிக்கொள்பவர் வைகோ. இவரது பேத்தியும், திருச்சி எம்பி துரை வைகோவின் மகளுக்கு வருகிற நவம்பர் 7ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தான் செல்லும் இடங்களிலும், கிடைக்கிற மேடைகளிலும் ஜாதி மறுப்புக் கொள்கைகளை, முற்போக்கு சிந்தனைகளுக்கு எதிரான மூட பழக்கவழக்கங்களை பற்றி, வீரஆவேசமாக வசனம் பேசிவரும் வைகோ மற்றும் அவரது மகனான துரை வைகோ ஆகியோர் தன் வீட்டு பெண்பிள்ளைக்கு மட்டும், தான் சார்ந்த அதே ஜாதியில், ஆச்சார முறைப்படி திருமணம் செய்து வைக்கிறார்கள். இதற்காக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழிலும்கூட குலம், கோத்திரம் என சகலமும் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. ஜாதி மறுப்பு திருமணம், பெண் விடுதலை, பெரியாரிசம். கருப்புத்துண்டு, திராவிடம் என பேசுகிற வைகோவும் அதை வழிமொழிகிற துரை.வைகோவும் தங்கள் இல்லத்தில் நடைபெறஉள்ள திருமணத்தை இந்து – வைஷ்ணவ முறைப்படி நடத்துகிறார்கள். அவர்கள் வீட்டு திருமணம். அவரவர்கள் விருப்பபடி நடத்திக்கொள்வதை யாரும் குறைகூற முடியாது. ஆனால், ஊருக்கு மட்டுமே உபதேசம் என்கிற ரீதியில், தன்னை ஆண்டாண்டு காலமாக பின்தொடரும் அப்பாவிகளுக்கு மட்டும் புரட்சிகர கருத்தை பரப்பிவரும் வைகோ, தான் மட்டும் அதனை கடைப்பிடிக்காததை எந்த விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும் என நெட்டிசன்கள் பலர் “உங்களுக்கு வந்தால் இரத்தம்… எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா…” என சமூகவலைதளங்களில் சகட்டுமேனிக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர். 1994ம் ஆண்டு வாரிசு அரசியலை எதிர்த்து தனி கட்சி உருவாக்கிய வைகோ, தனது கொள்கைகளில் நீர்த்துபோய், தற்போது தனது மகனைதான், அவரது கட்சியின் ஒரே ஒரு எம்.பியாக்கி இருக்கிறார். காலம்காலமாக மதிமுகவிற்கு உழைத்த எண்ணற்ற தீரர்கள் அக்கட்சியில் இப்போதும் இருக்கும்போதும் தனது மகனை மட்டுமே வாரிசு அரசியலில் களம் இறக்கியுள்ள வைகோவிற்கு இதெல்லாம் சகஜம்ப்பா… என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Comments are closed.