Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் புதிய பட்டியல்- விஜயகாந்த் அறிவிப்பு

தேமுதிக மாவட்ட கழக அமைப்பு தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் மாவட்ட  நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர் மாவட்ட தே.மு.தி.க.நிர்வாகிகள் பட்டியலை நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

திருச்சி மாநகர் மாவட்டத்தில் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் ஆகிய தொகுதிகள் அடங்கும். இதில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக டி.வி.கணேஷ், அவைத்தலைவராக வி.கே.ஜெயராமன், பொருளாளராக மில்டன் குமார், துணை செயலாளர்களாக ராஜ்குமார், மகாமுனி, எல்.ஐ.சி சங்கர், பிரீத்தா விஜய் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக ராமு, பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்களாக லோகராஜ், விஜய சுரேஷ் , ஐயப்பன், பெருமாள், பாலமுருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மலைக்கோட்டை பகுதி செயலாளராக என்.எஸ்.எம்.மணிகண்டன், பாலக்கரை பகுதி செயலாளர் சங்கர், உறையூர் பகுதி செயலாளர்ராக மோகன், தில்லை நகர் பகுதி செயலாளராக சாதிக் அலி, ஜங்ஷன் பகுதி செயலாளராக வெங்கடேசன், ஏர்போர்ட் பகுதி செயலாளராக குமார், பொன்மலை பகுதி செயலாளராக அருள்ராஜ், அரியமங்கலம் பகுதி செயலாளராக அலெக்ஸ், திருவரம்பூர் வடக்கு ஒன்றிய செயலாளராக மாரீசன், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக பரமசிவம், திருவெறும்பூர் கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளராக முத்துக்குமார், துவாக்குடி நகர செயலாளராக சிங்காரவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் .புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் கட்சியின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்