Rock Fort Times
Online News

திருச்சி ஜில்லா நாயுடு மஹாஜன சங்கம் சார்பில் முப்பெரும் விழா: நாளை 22ம் தேதி நடக்கிறது…!

திருச்சி ஜில்லா நாயுடு மஹாஜன சங்கம் சார்பில் 60-வது பொதுக்குழு கூட்டம், கடந்த 2023-2024ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் நற்சான்றிதழ், ஊக்க பரிசு வழங்கும் விழா மற்றும் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சி இபி ரோடு, செல்வ விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஜில்லா நாயுடு மஹாஜன சங்க திருமண மண்டபத்தில்  நாளை 22-09-2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி அளவில் நடக்கிறது. விழாவிற்கு சங்கத்தின் தலைவர் பி.விஜயகுமார் நாயுடு தலைமை தாங்கி உரையாற்றுகிறார். செயலாளர் எஸ்.கோவிந்தராஜுலு நாயுடு ஆண்டறிக்கையை வாசிக்கிறார்.  பொருளாளர் ஆர். பிரபுராம் நாயுடு 2023- 2024 ஆண்டிற்கான வரவு- செலவு கணக்குகளை சமர்ப்பிக்கிறார். துணைத் தலைவர்கள்  டி.எல்.கிருஷ்ணமூர்த்தி, ஜி.குணசேகரன், வி.ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.  இணைச்செயலாளர்  ஜெ.வேணுகோபால்  வரவேற்புரையாற்றுகிறார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி கிழக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி பங்கேற்று மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகையை  வழங்கி சிறப்புரையாற்றுகிறார். முடிவில் சங்கத்தின் துணைத் தலைவர் டி.என்.கலியபெருமாள் நன்றி கூறுகிறார். விழாவை முன்னிட்டு  5 வயது முதல் 10 வயது வரை உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு  மாறுவேட போட்டி, பாட்டு போட்டி, நடனம், பேச்சுப்போட்டி, ஓவிய போட்டிகளும்,  தம்பதியருக்கு இசை அதிர்ஷ்ட கட்டமும், அனைவருக்கும் இசை அதிர்ஷ்ட கட்டமும், ஊசியில் நூல் கோர்த்தல் போட்டியும், பெண்களுக்கு கோல போட்டியும் நடக்கின்றன.

விழாவில்  சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்   சி.கோவிந்தசாமி,  வி.முத்துசுவாமி,  கே.லட்சுமிராஜ்,  ஆர்.பாஸ்கரன்,  ஜி.முத்துகிருஷ்ணன், சி.கோகுல்தாஸ்,  டாக்டர்  டி.மனோகர்,  கே.செல்வராஜ்,  சி.பால்ராஜ்,  ஆர்.பி.ராமச்சந்திரன்,  ஜி.கிருஷ்ணமூர்த்தி,  கே .மதனகோபால்,  எஸ்.ஜி.சம்பத்குமார்,  பி. தண்டாயுதபாணி,  ஜே.வி.பிரசன்னா,  ஜே.வி.ஆர். புருஷோத்தமன்,  பி.சந்திரசேகர்,  கே.பாலாஜி,  ஜி.ராஜசேகரன், ஆர்.புருஷோத்தமன்,  இளைஞர் அணி தலைவர் ஜே.சரவணன் , செயலாளர் கே.சுரேஷ்குமார்  பொருளாளர்  எம்.அன்புராஜ் , மகளிர் அணி தலைவி ஜே.வஜ்ரமணி ஜெயராமன்,  செயலாளர் ஜெ.கீதா ஜெயக்குமார்,  பொருளாளர் கே.தனலட்சுமி கலியபெருமாள்,  ஆடிட்டர் வி.குமாரராஜ்,  சட்ட ஆலோசகர் வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி ஜில்லா நாயுடு மஹாஜன சங்கம் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணியினர் செய்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்