திருச்சி, பஞ்சப்பூரில் இன்று(11-03-2026) மாலை தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தின் நுழைவு வாயிலில் என்.டி.ஏ வில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்களின் புகைப்படத்துடன் பேனர் அமைக்கப்பட்டுள்ளது. அதில், எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் இடம்பெறவில்லை. இதனால், அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியை தவிர, நயினார் நாகேந்திரன், அன்புமணி, ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் மற்றும் பிற கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரது படமும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.