திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசகர்கள் நல சங்க தேர்தல் ! மூன்றாவது முறையாக தலைவரானார் சுகந்தி ராஜா !
திருச்சி மாவட்டத்தில் செகண்ட் ஹேண்ட் கார்களை விற்பனை செய்யும் டீலர்களின் நலன்களுக்காக கடந்த 2015ம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகனர்கள் ஆலோசகர் நல சங்கம். இச்சங்கத்தில் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்கள் தலைவர், பொருளாளர், செயலாளர், துணைத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்படி 2025 – 2028 ம் ஆண்டிற்கான சங்க தேர்தல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் சுமார் 600 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இச்சங்கத்தில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கே.ஜே சுரேஷ் பாபு என்கிற சுகந்தி ராஜா 234 ஓட்டுகள் பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக தலைவராக வெற்றி பெற்றார். அதேபோல் செயலாளராக, ஏ.ஜேம்ஸ்,பொருளாளராக, ஆர்.ராஜன்,துணைத்தலைவர்களாக ஒய்.அகஸ்டின், பி.நடராஜன் ,துணைச்செயலாளர்களாக,எம்.ஜெய் கணேஷ், ஆர். குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக,ஏ. அப்துல் ஹக்கீம், ஏ. அசாம் உசைன், பி. கணேசன், பி. ஹரிபாஸ்கர், ஏ.ஆருண் ரஷீத், ஜே.இன்ஃபன்ட் ராஜ்,ஏ.ஜோசப் ஜான்சன், கே. காதர் அபுதாஹிர், எம்.காத்தான், ஜே.மாரியப்பன், எஸ்.முகமது இலியாஸ்,ஏ.முகமது நாசர், ஏ.நாகராஜ், ஜே.பீர்முகமது, எஸ். பிரபாகரன், பி.பிரகாஷ், ஜி.ஆர். புகழேந்தி, ஆர்.ரபிக் முகமது, கே. சங்கர், எம்.சித்திக், எம்.சையது ஷேக் அப்துல்லா, எஸ்.விக்னேஸ்வரன், டி.ராஜசேகர் உள்ளிட்ட 23 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வாகினர். தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு சக சங்க உறுப்பினர்கள் பொன்னாடை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Comments are closed.