வெளிநாடுகளில் ஆராய்ச்சிப் படிப்பு – பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித் தொகை விண்ணப்பித்து பயனடைய திருச்சி மாவட்ட கலெக்டர் அழைப்பு!
வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை வழங்கப்படுவதாக திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது., மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான முதுநிலை, பிஹெச்டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். தகுதியானோர் தங்களது விண்ணப்பங்களை மே 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மத்திய அரசின் பழங்குடியின அமைச்சக இணையதளமான https:// overseas.tribal.gov.in. என்பதை பார்வையிடலாம். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்
Comments are closed.