Rock Fort Times
Online News

திருச்சியில் கிரிக்கெட் போட்டி – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்..

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்..

முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் மாநகர தி.மு.க. செயலாளர் மு.மதிவாணன் ஏற்பாட்டில் கிரிக்கெட் தொடர் போட்டி இ. பி. ரோடு மதுரம் மைதானத்தில் 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. போட்டியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். போட்டியில் வெல்லும் அணி வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ.5 ஆயிரமும், தொடர் நாயகன் பரிசாக ரூ.3 ஆயிரமும், இறுதி போட்டியில் சிறந்த வீரருக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்படுகிறது. திருச்சி கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட 72 வார்டுகளின் சார்பாக தலா ஒரு அணி போட்டியில் பங்கு கொள்கிறது. போட்டியின் தொடக்க நிகழ்வில் மாநில நிர்வாகி செந்தில், மாவட்ட துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லிலாவேலு, மூக்கன், கார்த்தி, மாநகர நிர்வாகிகள் சந்திரமோகன், பொன்செல்லையா, சரோஜினி, பகுதி செயலாளர்கள் மோகன், நீலமேகம், ராஜ்முஹம்மது, மணிவேல், சிவக்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்