திருச்சி கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் யுவஸ்ரீ (வயது 23).இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் படித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இது, இரு வீட்டாருக்கும் தெரிய வரவே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். இதற்காக திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. இந்நிலையில் காதலனுடன் யுவஸ்ரீ செல்போனில் அதிக நேரம் பேசியுள்ளார். சம்பவத்தன்று காதலனிடம் பேசிய போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த யுவஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து அவரது தந்தை பாலசுப்ரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் சம்பவ இடத்திற்கு வந்து யுவஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.